Maruti Suzuki Omni-ல் எந்த Engine நல்லது Carburator Engine vs Mpfi Engine
பகுதி | விவரம் |
---|---|
Maruti Suzuki Omni-ல் எந்த Engine நல்லது | Mpfi & Corburator Engine-களின் அடிப்படை விவரங்கள் |
Carburator Engine | கார்பரேட்டர் இன்ஜின் அம்சங்கள் மற்றும் நன்மைகள் |
MPFI Engine | MPFI இன்ஜின் அம்சங்கள் மற்றும் நவீன தன்மைகள் |
Carburator vs MPFI – எது Long Life? | இரண்டு இன்ஜின்களின் ஒப்பீடு மற்றும் ஆய்வு |
மொத்ததில் எந்த இஞ்ஜின் பெஸ்ட் | தேர்வுக்கான முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் |
✅Maruti Suzuki Omni கார் குறித்து பார்க்கும் போது,அவற்றில் கார்பரேட்டர் எனப்படும் பழைய தொழில்நுட்ப இயந்திரமும் mpfi (மல்டிபிள் பாயிண்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன்) எனப்படும் புதிய தொழில்நுட்ப இயந்திரமும் உள்ளது.
இந்த இரண்டிற்கும் இடையே எது சிறந்தது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் .Carburator Engine :
✅Carburator engine பழைய Method மற்றும் எளிய வடிவமைப்பில் இருந்தாலும், அதை பராமரிக்க எளிதாகவும் செலவில் குறைவாகவும் இருக்கும். இதற்கு மேற்படி இயந்திரங்களில் உதிரி பாகங்கள் கிடைப்பது எளிது என்பதும் ஒரு பெரிய நன்மையாக இருந்தாலும் கார்பரேட்டர் இயந்திரங்கள் எரிபொருள் சிக்கனத்தில் சற்றே குறைவாக செயல்படக்கூடிய தன்மை உடையது .
மேலும் அந்த engine அதிகமாக கார்பன் வெளியேற்றம் இருப்பாதால் இது இயற்கைக்கு மாசுபாடு ஏற்படுத்துவதாக இருக்கிறது.இதன் மைலேஜ் mpfi engine அளவுக்கு மைலேஜ் கிடைக்காது.இந்த engine பழுது பார்பதற்கு மிகவும் எளிதானது .MPFI Engine:
✅Mpfi எனப்படும் புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள், எரிபொருளை சிறப்பாக உபயோகித்து அதிக மைலேஜ் வழங்கும் திறன் கொண்டவை. இந்த இயந்திரங்கள் எரிபொருளை சீராக விநியோகிப்பதால், வாகனத்தின் வேகமும் செயல்திறனும் மேம்படும்.
இதே சமயத்தில், மாசுபாட்டை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. ஆனால், எம்.பி.எப்.ஐ இயந்திரங்களின் பராமரிப்பு செலவு அதிகமாகும், மேலும் பழுதுபார்க்க அவற்றுக்கான தொழில்நுட்ப மெக்கானிக் தேவைப்படும்.கார்புரேட்டர் என்ஜின் vs MPFI என்ஜின் – எது Long life? தரும்
கார்புரேட்டர் என்ஜின் மற்றும் MPFI என்ஜின் ஆகியவை வாகனங்களின் மைய கருவிகளாகும். பழைய மாடல் வாகனங்களில் காணப்படும் கார்புரேட்டர் என்ஜின்கள், எளிய வடிவமைப்புடன், எரிபொருள் மற்றும் காற்றை கலந்து வேலை செய்யும் முறையால் பரவலாக பயன்படுத்தப்பட்டன. இவை பராமரிக்க எளிதாகவும், குறைந்த செலவில் சரிசெய்யக்கூடியவையாகவும் இருக்கும். ஆனால், எரிபொருள் திறன் குறைவாக இருக்கும் என்பதாலும், மாசு உமிழ்வு அதிகமாக இருக்கும் என்பதாலும், நவீன வாகனங்களில் இதன் பயன்பாடு குறைந்து வருகிறது.
மாறாக, மல்டி-பாயிண்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் (MPFI) என்ஜின்கள் புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் ஒவ்வொரு சிலிண்டருக்கும் சரியான அளவில் பெட்ரோல் வழங்குவதன் மூலம் எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கின்றன. MPFI என்ஜின்கள் அதிக மைலேஜ் தரும் திறனையும், குறைந்த மாசு உமிழ்வையும் கொண்டுள்ளன. மேலும், வாகனத்தின் ஆயுளையும் உயரும்.
Alloy Wheels vs Spoke Wheels – உங்களுக்கே ஏற்றது எது? முழுவதும் படிக்க...
மொத்ததில் எந்த இஞ்ஜின் பெஸ்ட்
✅குறைந்த பராமரிப்பு செலவுடன் உங்கள் தினசரி பயன்பாட்டிற்கு பொருத்தமாக கார்பரேட்டர் இயந்திரங்கள் சிறந்த தேர்வாகும்.
அதே வேளையில் நீண்ட பயணம் மற்றும் எரிபொருள் மாசுபாடு குறைவதற்காக எம்.பி.எப்.ஐ இயந்திரங்கள் உங்களுக்கேற்ப தேர்வாக பயன்படுத்தி கொள்ளலாம் .