அலாய் வீல்கள் vs ஸ்போக் வீல்கள் எது சிறந்தது
⏩கடந்த 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் spoke wheel உள்ள bikes விற்பனையில் இருந்தது . ஆனால் தற்பொழுது Alloy wheels உள்ள Bikes விற்பனையில் அதிகமாக உள்ளது.
பெரும்பாலும் மக்கள் Alloy wheels மோட்டார் பைக்களையே அதிகம் விரும்புகின்றனர்.காரணம் அவற்றில் உள்ள சிம்பிளான டிசைன் மற்றும் அழகிய வடிவமைப்பே ஆகும் .Alloy Wheels:
⏩Alloy Wheels பல்வேறு உலோகங்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது . இவை பெரும்பாலும் அழகான தோற்றம் மற்றும் Stylish வடிவமைபுகளில் பிரபலமாக உள்ளது . Alloy Wheels இலகுவான மற்றும் திடக்கட்டுமான வடிவமைப்பை கொண்டிருப்பதால், மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவை.
அதோடு, இவை குறைவான பராமரிப்புடன் நீண்ட காலம் வரை உழைக்ககூடியது . மேலும், பஞ்சர் போன்ற நிகழ்வுகளில் சிக்கலான உதிரி பாகங்களை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் சுலபமாக சரிசெய்ய முடியும். நீண்ட தூர பயணங்களுக்கு பைக் பயன்படுத்துபவர்களுக்கு Alloy Wheels சிறந்த தேர்வாக இருக்கும். பராமரிப்பு செலவு மிக குறைவு.Spoke Wheels:
⏩ Spoke Wheels பழைய மாடல் பைக்குகளுக்கு பொதுவாக காணப்படும் வகையாகும். இவை கரடு முரடான மற்றும் மேடு பள்ளங்களில் ஏற்படும் அதிகப் லோடினை தாங்கும் தன்மை இவற்றில் உள்ளது . குறிப்பாக, வேகமான சாலை போக்குவரத்து மற்றும் மிதிவண்டி சவாரிக்கான நிலத்தடி தடுமாறல்கள் அதிகமுள்ள இடங்களில் Spoke Wheels சிறப்பாக செயல்படுகின்றன.
இவை பளு மிக்க சக்கரங்களாக இருப்பதால், மிகப்பெரிய அடர்த்தியுள்ள நிலப்பரப்புகளுக்கு உகந்ததாக உள்ளது.பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கும்.
பகுதி |
---|
அலாய் வீல்கள் vs ஸ்போக் வீல்கள் எது சிறந்தது |
Alloy Wheels |
Spoke Wheels |
தமிழ்நாடு சாலைகளுக்கு ஏற்ற பைக் வீல் |
ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு ஏற்ற வீல் |
உங்களுக்கு எது பெஸ்ட் |
தமிழ்நாடு சாலைகளுக்கு ஏற்ற பைக் வீல் எது
⏩தமிழ்நாட்டில் சாலைகள் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் வித்தியாசமாக காணப்படும். நகர்ப்புற சாலைகளில் அலாய் வீல்கள் மிகச் சிறந்த தேர்வாகும்.
இவை ஸ்டைலிஷ் தோற்றத்துடன், பராமரிப்பு செலவு குறைவாகவும், நெடுநாட்கள் பயன்படுத்தவும் உதவும். ஆனால் கிராமப்புற, மலைப்பகுதி போன்ற கரடு முரடான சாலைகளுக்கு ஸ்போக் வீல்கள் மிக உகந்தது. இவை பலத்த லோடினையும், மேடு பள்ளங்களையும் தாங்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு ஏற்ற வீல் - அலாய் வீல் vs ஸ்போக் வீல்
ஸ்போர்ட்ஸ் பைக்குகள் அதிக வேகம் மற்றும் செயல்திறனை முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்டவை. இதற்கு வீல் தேர்வு மிகவும் முக்கியமானது.
அலாய் வீல்கள் மற்றும் ஸ்போக் வீல்கள் ஆகியவை இரண்டுக்கும் தனித்துவமான அம்சங்கள் உள்ளன.
-
அலாய் வீல்கள்
பல்வேறு உலோகங்களின் கலவையால் தயாரிக்கப்படுவதால், அவை மிகவும் இலகுவானது. இதனால் பைக்கின் மொத்த எடை குறைந்து, வேகத்தை அதிகரிக்க உதவுகிறது. அலாய் வீல்கள் அழகான தோற்றத்துடன், ஸ்டைலிஷ் வடிவமைப்பு கொண்டது மட்டுமல்லாமல், பராமரிப்பு செலவு குறைவாக உள்ளது. ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இது சிறந்த தேர்வாக கருதப்படுகிறது, குறிப்பாக நகரப்புறங்களில் பயணிக்கும்போது.
-
ஸ்போக் வீல்கள்
கரடு முரடான சாலைகளில் மற்றும் மேடு பள்ளங்களில் அதிக பளுவை தாங்கக்கூடிய தன்மை கொண்டவை. ஆஃப்ரோடு பயணங்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்கான ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு ஸ்போக் வீல்கள் பொருத்தமானவை. ஆனால், அதிக பராமரிப்பு செலவு மற்றும் திருத்த வேலைகளுக்கான சிரமம் காரணமாக, ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு அலாய் வீல்கள் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன.
உங்களுக்கு எது பெஸ்ட் Alloy Wheel vs Spoke Wheel
⏩நகர்ப்புற சாலைகளுக்கு Alloy Wheels மிகவும் வசதியானவை, அதேசமயம் மலைப்பகுதி மற்றும் கிராமப்புற சாலைகளுக்கு Spoke Wheels ஏற்றவை.