ஆஃப்ரோட்ல ஆட்டம் காட்டுற மஹிந்திரா ஜீப்பின் வளர்ச்சி!
ஆட்டோமொபைல் துறையில் இந்திய தயாரிப்பான மஹிந்திரா நிறுவனத்திர்க்கு பெரும் பங்கு உள்ளது. மஹிந்திரா நிறுவனம் தயாரிப்பில் ஜீப்பின் வளர்ச்சி (Mahindra Jeep Evolution) என்பது இந்தியா மற்றும் உலகளவில் கார் உற்பத்தி துறையில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. 1947ஆம் ஆண்டில், மஹிந்திரா நிறுவனம் ஜீப் வாகனங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது மேலும் பல பரிணாமங்களை இதுவரை கண்டுள்ளது.
மஹிந்திரா ஜீப்பின் வளர்ச்சி என்பது, இந்திய மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்கள் தயாரிக்க மட்டுமின்றி, இந்தியாவின் துறைமுகங்கள், கிராமப்புறங்கள், மற்றும் நகரங்களின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
வில்லிஸ் ஜீப் நியாபகம் இருக்கா?
மஹிந்திரா நிறுவனம் ஆரம்பகாலம் (1947 - 1960) Willys Overland என்ற ஒரு அமெரிக்கா கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து Willys Jeep MB மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
- CJ (Civilian Jeep) மாடல்கள்
- Willys CJ2A: இந்த மாடல் சிவில் பயன்பாட்டுக்கான ஜீப் ஆகும்.
- Willys CJ3A மற்றும் CJ3B: இந்த மாடல் வலிமையான ஜீப்கள் சாலையற்ற பாதைகளில் சிறப்பாக இயங்கும் தன்மை கொண்டது. எனவே அக்கால கட்டத்தில் இதன் உற்பத்தியில் அதிகமாக இருந்தது.
- Willys CJ3B: இந்தியாவின் பல்வேறு துறைகளில், குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் வனத்துறையில் முக்கிய பங்காற்றியது.
- Mahindra CL550 MDI: இது சாலை மற்றும் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கான சிறந்த வாகனம் ஆகும்.
Mahindra Jeep வலிமையான வடிவமைப்பு மற்றும் நீண்ட கால பயன்பாடு காரணமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் அரசு துறைகளில் (ராணுவம், காவல் துறை) பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
Mahindra MM540
- 1980களில் புதிய தலைமுறைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யபட்டு Mahindra MM540 அறிமுகமானது.
- 2.1 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டது.
- வெளிநாட்டு Willys ஜீப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், இது இந்திய கிராமப்புற மற்றும் நகரப்புற மக்கள் பயன்பாட்டிற்கு மிகப் பொருத்தமாக இருந்தது.
Mahindra Armada மற்றும் Mahindra Commander
- 1993ஆம் ஆண்டில் Mahindra Armada மற்றும் Mahindra Commander அறிமுகமானது.
- Mahindra Armada ஜீப்பில் நவீன வசதிகளுடன் கூடிய தொழில் மற்றும் குடும்ப பயண வாகனமாக பயன்படுத்தபட்டது.
- Mahindra Commander இந்த மாடல் பொதுவாக தொழில் பயன்பாட்டிற்காகவும் அதிக பயணிகளை ஏற்றிச்செல்வும் பயன்படுத்தபட்டது.
2000களில் Mahindra Bolero மற்றும் Mahindra Scorpio அறிமுகமானது. மஹிந்திராவின் Scorpio முதல் SUV கார் ஆகும். இவை இரண்டு கார்களும் நவீன சவாரி அனுபவத்துடன், ஜீப்பின் அடிப்படை வலிமையையும் சேர்த்து உருவாக்கபட்டது.
மஹிந்திரா தார்
- மஹிந்திரா தார் (2010) மஹிந்திரா ஜீப்பின் அடிபடை மற்றும் SUV விஷயங்களை சேர்த்து 2.5 லிட்டர் CRDe டீசல் என்ஜினுடன் அறிமுகமானது.
- ஆஃப்ரோடு மற்றும் நகர சவாரிக்கான சிறந்த தேர்வு உள்ளது.
மஹிந்திரா தார் ROXX
- மஹிந்திரா தார் ROXX முழுமையாக தார் மறு வடிவமைப்பு ஆகும்.
- BS6, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், மற்றும் நவீன வசதிகளை கொண்டது.
- இளைஞர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
கடைசியாக Mahindra XUV மற்றும் TUV மாடல்கள் ஜீப்பின் அடிப்படையிலான SUV வரிசையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
மஹிந்திரா நிறுவன கார்களில் உங்களுக்கு பிடித்த காரை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.