கடன் (EMI) மூலம் கார் வாங்கலாமா?
நவீன காலத்தில் கார் என்பது ஒரு குடும்ப அங்கம் ஆகும். நடுத்தர மக்களுக்கு கார் வாங்குவது ஒரு சவாலாக உள்ளது. இருப்பினும் மக்கள் காரின் அவசியம் கருதி லோன் மூலம் கார் வாங்குகின்றனர். லோன் மூலம் கார் வாங்குவது, உங்கள் நிதி நிலையைப் பொறுத்து சரியான முடிவாக இருக்க முடியும்.
வட்டி விகிதம் மற்றும் மாதாந்திர கட்டணங்களை கவனமாக மதிப்பிட்டு, உங்கள் வருமானம் மற்றும் செலவுகளுடன் ஒப்பிட்டு லோன் எடுத்து கார் வாங்கலாம். ஆனால் அதில் கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தக் கூடும் மற்றும் கார் பராமரிப்பு, காப்பீடு மற்றும் எரிபொருள் செலவுகள் போன்ற செலவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
லோன் மூலம் கார் வாங்கும் போது திட்டமிட வேண்டிய சில குறிப்புகள்
- அடிப்படை தேவைகள்
- நிதி நிலை
- வட்டி விகிதம்
- பட்ஜெட் திட்டம்
- பராமரிப்பு மற்றும் செலவுகள்
அடிப்படை தேவைகள்
- கார் வாங்குதல் உங்கள் வாழ்வில் அடிப்படை தேவைகளுக்கு உதவுமா? என்று திட்டமிட வேண்டும் உதாரணமாக, வேலை, பயணம், அல்லது குடும்ப தேவைகள்.
நிதி நிலை
- உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் சேமிப்புகளைப் பொருத்து, நீங்கள் லோன் மூலம் கார் வாங்குவதை மதிப்பிட வேண்டும். கார் லோனுக்கு மாதாந்திர கட்டணங்கள் அதிகப்படியான சுமை படுத்தினால், அது உங்கள் வாழ்வின் மற்ற பகுதிகளுக்கு பிரச்சினைகளை உருவாக்கலாம்.
20-க்கு மேல் மைலேஜ் கொண்ட SUV கார்கள் Click Here
வட்டி விகிதம்
- உங்கள் கார் லோன் வட்டியை சரியாக ஆராய்ந்து, அதற்கான கட்டணங்களை மாதாந்திரமாக எளிதாகச் செலுத்த முடியுமா என்பதை பரிசோதிக்கவும். வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், அதுவே நமக்கு பெரிய சுமையாக மாறலாம்.
பட்ஜெட் திட்டம்
- உங்கள் பணத்தை முன்பே சேமித்து, குடும்ப பட்ஜெட்டை திட்டம் அமைப்பது சிறந்தது. கார் வாங்குவது தவிர, அடுத்த சில ஆண்டுகளுக்கு உங்கள் மற்ற தேவைகள் மற்றும் சேமிப்புகளை எவ்வாறு பின்பற்றுவது என்பதையும் கருத வேண்டும்.
Royal Enfield bullet for Bullet lovers sale in tamilnadu Click Here
பராமரிப்பு மற்றும் செலவுகள்
- கார் வாங்கிய பிறகு, அதை பராமரிக்கவும், காப்பீடு மற்றும் சர்வீசிங் செலவுகளையும் நினைவில் வைத்து வேண்டும்.
முடிவுரை
- லோன் மூலம் கார் வாங்கலாமா? என்பது மேல் குறிப்பிட்ட காரணிகளை பொறுத்து தீர்மானிக்கலாம்.
- பொதுவாக நடுத்தர மக்கள் லோன் மூலம் கார் வாங்கும் போது தனது அடிப்படை பாதிக்காமல் திட்டமிட்டு வாங்குவது நல்லது.
- திறமையான திட்டமிட்டு உங்கள் வருமானத்தை பெருக்கி லோன் மூலம் கார் வாங்குவது சிறந்தது.