தூத்துக்குடியில் VinFast எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை துவக்கம் – ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள்!

தூத்துக்குடியில் VinFast எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை துவக்கம் – ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள்!

   வியட்நாம்ல இருந்தே உலகம் முழுக்க பிரபலமான VinFast இப்போ நம்ம தூத்துக்குடி SIPCOTல தன் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையைக் கட்டி திறந்தாச்சு! 2025 ஆகஸ்ட் 4ல துவங்கிய இந்த புது ஆலை, ஆரம்பத்துலே வருடத்துக்கு 50,000 EVகள (VF 6 & VF 7 மாடல்கள்) தயாரிக்கப் போகுது. அப்புறம் தேவை இருந்தா 1,50,000 கார்கள் வரைக்கும் உற்பத்தி திறனை உயர்த்தலாம். 

    இந்த திட்டத்துக்கு ஆரம்ப முதலீடா ₹4,300 கோடி போட்டுருக்காங்க, மொத்தம் ₹16,000 கோடி வரை செலவிடப் போகுறாங்க.

தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள்!

       வேலை வாய்ப்பா மட்டும் 3,000–3,500 பேர் நேரடியாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான பேர் பின்வழி வேலை வாய்ப்புகளாலும் பயன் பெறப் போறாங்க. 

தூத்துக்குடியில் கார் ஏற்றுமதி வாய்ப்புகள்!

      இதுல உற்பத்தி ஆன கார்கள் இந்தியாவோட கூட, தென் ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா எல்லா இடங்களுக்கும் ஏற்றுமதி ஆகப் போகுது. நம்ம தூத்துக்குடிக்கு இது ஒரு பெருமை சொல்லனும்! 🚗⚡

நம்ம இந்தியாலே VF 6, VF 7 எலக்ட்ரிக் SUV களுக்கான முன்பதிவு எப்போ?

 


        ஜூலை 15, 2025ல இருந்தே, யாருக்கோ வேண்டும்னா நம்மூர் VinFast ஷோரூம்லயும், ஆன்லைன்லயும் வெறும் ₹21,000 கட்டி booking போடலாம். ஆபிஷியலா காரை launch பண்ணுறது இந்த 2025 ஆகஸ்ட் மாதத்துல; அப்புறம் தானே delivery ஆரம்பிக்கப் போறாங்க. அதாவது, இனிமே சில மாதத்துலே நம்ம ரோட்டுல VinFast கார்கள் கலக்க ஆரம்பிக்கிடும்! 🚗⚡

இந்தியாவில் VinFast VF 6 & VF 7 – எதிர்பார்க்கப்படும் விலை விவரம்!

          இப்போ வியட்நாம் விலையைப் பார்த்தா, இந்தியாவில VinFast VF 6 சுமார் ₹22–25 லட்சம் ரேஞ்ச்ல, VF 7 ₹30–33 லட்சம் ரேஞ்ச்ல இருக்க வாய்ப்பு அதிகம். ஆனா இது எக்சாக்ட் விலை இல்ல, தயாரிப்பு தொடங்கி, GST, சப்சிடி எல்லாமே பாதிச்சு தான் final price வரும்.

VinFast தூத்துக்குடி வருகை – Showroom-லும் Service-லும் புது அலை!

   VinFast இப்போ இந்தியாவுக்கு நல்ல வரவேற்போட வந்துட்டாங்க! 27 நகரத்துல 32 showroom-um service center-um ஓடிக்கிட்டே இருக்கு; ஆண்டு முடிவுக்குள் 35 ஆகப்போகுது. ஸூரத்தில் முதல் showroom, அடுத்தது சென்னை Teynampet-ல 4,700 sq.ft-ல கிளம்பிடுச்சு. சேவை பக்கம் myTVS-உடன் கூட்டணி – 120 workshop, 24×7 call center, roadside help, mobile charging, instant service எல்லாமே செட் பண்ணி வைத்தாச்சு.

எது எப்படியோ? தமிழ்நாட்டில் இனி EV கார் அதிகம் பார்க்கலாம் 

    முடிவாகச் சொல்லப் போனால், VinFast-ன் இந்தியப் பயணம் இப்போதுதான் ஆரம்பித்தாலும், அதன் விரிவாக்க வேகம் மற்றும் முழுமையான சேவை வலையமைப்பு, வருங்காலத்தில் தூத்துக்குடியிலும் வாடிக்கையாளர்களுக்கு நவீன, நம்பகமான மற்றும் விரைவான மின்கார் அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.