பருவ காலங்களில் உங்கள் காரை பராமரிப்பது எப்படி?

பருவ காலங்களில் உங்கள் காரை பராமரிப்பது எப்படி?

        ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப காரை பராமரிப்பது அதன் ஆயுளையும் செயல்திறனையும் அதிகரிக்க உதவும். நாட்டில் உள்ள பருவ காலங்கள்


 

  • கோடை காலம் (Summer) 
  • குளிர் காலம் (Winter) 
  • மழை காலம் (Monsoon)


கோடை காலம் (Summer)

        கோடை காலங்களின் சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவே  வெப்ப நிலை அதிகமாக காணபடும். இக்கால கட்டத்தில் காரின் வெளிதோற்றம் பெயிண்ட், எஞ்சின் எண்ணெய் மற்றும் கூலன்ட், டயர் அழுத்தம், ஏர் கண்டிஷனிங் போன்ற பாகங்களின் செயல்பாடு குறையும்.


 

  • பெயிண்ட் பாதுகாப்பு: சூரிய ஒளியில் இருந்து காரின் பெயிண்டை பாதுகாக்க வாகனத்தை நிழலில் நிறுத்தவும் அல்லது கார் கவர்  பயன்படுத்தவும். 
  • எஞ்சின் எண்ணெய் மற்றும் கூலன்ட்: வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது எஞ்சின் அதிக சூடாவதை தவிர்க்க, எஞ்சின் எண்ணெய் மற்றும் கூலன்ட் அளவை சரிபார்த்து தேவைப்பட்டால் நிரப்பவும். 
  • டயர் அழுத்தம்: வெப்பத்தில் டயர்களின் வெப்ப நிலை அதிகரிக்கலாம், எனவே அவற்றை அடிக்கடி சரிபார்க்கவும். 
  • ஏர் கண்டிஷனிங்: ஏசி சரியாக வேலை செய்கிறதா என சோதித்து, தேவைப்பட்டால் சர்வீஸ் செய்யவும்.

மலை பகுதியில் கார் ஓட்டுவது எப்படி  வாங்க தெறிஞ்சிக்கலாம் click  here

குளிர் காலம் (Winter)

        குளிர்காலங்களின் சூரிய ஒளியின் தாக்கம் மிதமாக இருக்கும், எனவே  வெப்ப நிலை குறையும். 



  • பெயிண்ட் பாதுகாப்பு: காரின் பெயிண்டை பாதுகாக்க கார் கவர் பயன்படுத்தவும்.
  • பேட்டரி: குளிரில் பேட்டரி செயல்திறன் குறையலாம், எனவே அதை சோதித்து சார்ஜ் செய்யவும். 
  • ஹீட்டர்: குளிர்ந்த காலையில் பயணம் சௌகரியமாக இருக்க ஹீட்டர் சரியாக வேலை செய்கிறதா என பார்க்கவும் 

        இக்கால கட்டத்தில் காரின் வெளிதோற்றம், பேட்டரி, ஹீட்டர், வைப்பர்கள் போன்ற பாகங்களின் செயல்பாட்டை அடிக்கடி சரி பார்த்து கொள்ள வேண்டும்


மழை காலம் (Monsoon)

        மழை காலங்களின் சூரிய ஒளியின் தாக்கம் இருக்கும், எனவே  வெப்ப நிலை மிக குறைவு.


 

  • வெளிதோற்றம் அரிப்பு தடுப்பு: காரின் அடிப்பகுதியில் துரு ஏற்படாமல் இருக்க அடிக்கடி சுத்தம் செய்யவும். 
  • வைப்பர்கள்: மழையில் பார்வை தெளிவாக இருக்க வைப்பர்கள் சரியாக வேலை செய்கிறதா என சரிபார்க்கவும். 
  • பிரேக்குகள்: ஈரமான சாலைகளில் பிரேக் செயல்திறன் குறையலாம், எனவே அவற்றை சோதித்து தேவைப்பட்டால் பழுது பார்க்கவும். 
  • டயர் நிலை: மழையில் சறுக்காமல் இருக்க டயர்களின் அளவு (Tread) போதுமானதாக இருக்க வேண்டும்.


பொதுவான ஆலோசனைகள் 

  • வழக்கமான சர்வீஸ்: ஒவ்வொரு பருவத்திற்கு முன்பும் காரை முழுமையாக சர்வீஸ் செய்யவும். 
  • சுத்தம்: காரை அடிக்கடி கழுவி, அழுக்கு மற்றும் உப்பு (கடற்கரை பகுதிகளில்) சேராமல் பார்த்துக் கொள்ளவும். 
  • அவசர கருவிகள்: எப்போதும் ஒரு அவசர கிட் (emergency kit) வைத்திருக்கவும், குறிப்பாக மோசமான வானிலையில் பயணிக்கும் போது.

        உங்கள் பகுதியின் காலநிலை மற்றும் சாலை நிலைமைகளுக்கு ஏற்ப இந்த பராமரிப்பு மாறுபடலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.